கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து பிணையில் செல்ல அனுமதி
மட்டக்களப்பில் சிஐடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 கோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (3) பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
நிதி மோசடி
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவருடன் இணைந்து வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட நிலையில் அந்த வர்த்தகத்திற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடி 70 இலட்சம் ரூபா பணத்தை அருண் தம்பிமுத்து பெற்றுள்ளார்.
அதற்கான வர்த்தக நடவடிக்கை இடம்பெறமால் நிதியை மோசடி செய்தார் என கனடா நாட்டிலுள்ள தனிநபர் கொழும்பிலுள்ள சிஜடி நிதி மோசடி பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த முறைப்பாட்டுக்கு அமைய அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் தனியார் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த வந்த சிஐடி நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று(2) புதன்கிழமை கைது செய்தனர்.
சரீர பிணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
அருண் தம்பிமுத்து சார்பாக முன்னிலையாகிய கமேகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்கு வர்த்தம் தொடர்பானது இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக வாதங்களை முன்வைத்த நிலையில் நீதவான் அவரை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
