வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் திடீர் சோதனை
வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய திடீர் சோதனையில் (Vavuniya) கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (3) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மூவர் கைது
இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 - 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ,கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் நெளுக்குளம் பொலிஸாரிடம் விசேட அதிடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
