ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்
இந்திய(India) தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு பயணித்த ஏர் இந்தியா விமானமானது ரஷ்யாவின்(Russia) ரஷ்னொயர்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானமானது 225 பயணிகள்,19 விமான ஊழியர்கள் என மொத்தமாக 244 பேருடன் நேற்று பயணித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களில் ரஷ்ய வான்பறப்பில் பறந்துகொண்டிருந்தது.
இதன்போது, எதிர்பாராத விதமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் இதையறிந்த, விமானி உடனடியாக ரஷ்ய விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ரஷ்யாவின் ரஷ்னொயர்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரையிறக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாற்று விமானம் மூலம் பயணிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
