கனடாவில் மேலும் ஒரு சீக்கியர் துப்பாக்கிச் சூட்டில் பலி
கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சன்ராஜ் சிங் (24) என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் உடலைக் பொலிஸார் கைப்பற்றி உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் இந்த மாதத்தில் பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
ஒரே மாதத்தில் இரு சீக்கியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
கடந்த டிசம்பர் 3ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்திய வம்சாவளியான 21 வயது கொண்ட பவன்பிரீத் கவுர் என்ற சீக்கிய இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஒரே மாதத்தில் சீக்கியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நவம்பர் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி வாகன நிறுத்துமிடத்தில் 18 வயது இந்திய வம்சாவளி இளம்பெண் மெஹக்ப்ரீத் சேத்தி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
