இந்திய பெருங்கடலில் ஏகபோக உரிமை கோர முடியாது: ஜெய்சங்கர் கருத்து
இந்திய பெருங்கடலில் இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க வேண்டும். எனினும் பிராந்தியத்தில் ஏகபோக உரிமை கோர முடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன கப்பல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக திடகாத்திரமாகவும், பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளன.
இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை
சமாளிப்பதற்கு இலங்கைக்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியாவாகும் ”என தெரிவித்துள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri