கொழும்பை வந்தடைந்த இந்திய போர்க்கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றுள்ளனர்.
INS SAHYADRI என்பது 320 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படும் 143 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும்.
போர்க்கப்பல்
ஐஎன்எஸ் சயாத்ரி குழுவினர் தங்கள் வருகையின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
அவர்கள் நாடு முழுவதும் உள்ள பல சுற்றுலா தலங்களையும் பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகையை முடித்துக்கொண்டு INS SAHYADRI ஏப்ரல் 07ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 17 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
