இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இன்று கொழும்புக்கு விஜயம்!
இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவில் (First Training Squadron – 1TS) அங்கம் வகிக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் (Tir), சுஜாதா மற்றும் இந்தியக் கரையோரக் காவல் படைக் கப்பலான சாரதி ஆகியவை இன்று (26) முதல் 28ஆம் திகதி வரை நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.
நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் இடம்பெறுவதுடன், சீஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகம் மற்றும் மாலைதீவின் மாலே துறைமுகம் ஆகியவற்றுக்கான விஜயங்களைத் தொடர்ந்து, இக்கப்பல்கள் தமது தளத் துறைமுகமான கொச்சிக்குத் திரும்பவுள்ளன.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் போது
இந்தியக் கடற்படை, இந்தியக் கரையோரக் காவல் படை மற்றும் நட்பு நாடுகளின் கடற்படை அதிகாரிகளாகப் பயிற்சி பெறுவோருக்கு ஆரம்பகட்ட கடல் பயிற்சிகளை வழங்குவது முதலாவது பயிற்சிப் படைப்பிரிவின் முக்கிய பொறுப்பாகும்.

3 இந்தியக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் போது, இலங்கை கடற்படையின் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப், கப்பல்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தியக் கடற்படையின் அதிகாரிப் பயிற்சியாளர்கள், இலங்கை கடற்படையினருடன் தொழில்சார் பயிற்சிகள், கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாற்ற நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைப் பயிற்சியாளர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரிக்கும், இலங்கை கடற்படைப் பயிற்சியாளர்கள் இந்தியாவின் பயிற்சிக் கப்பல்களுக்கும் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri