இந்திய கடற்படை கப்பல் ஷார்தா கொழும்புக்கு வருகை
இந்திய கடற்படையின் INS ஷார்தா, சுகன்யா வகை கடலோர ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel - OPV) ஜூன் 10 முதல் 13 வரை Operational Turnaround (OTR) மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்திற்காக இந்திய இராணுவத்திலிருந்து அனுப்பப்படும் பொருட்களை மாற்றி ஒப்படைக்கும் நோக்கில் கொழும்பிற்கு வருகை தரவுள்ளது.
இப்பொருட்கள் 2026 ஜூன் 16 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வில் முறையாக கையளிக்கப்படும்.
யோகா அமர்வொன்றில் பங்கேற்க
கப்பல் கொழும்பை வந்தடைந்ததும், அதன் கட்டளை அதிகாரியான கொமாண்டர் கார்த்திக் சச்ச்தேவா, மேற்கு கடற்படை பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் எஸ். ஜே. குமாரா அவர்களை சந்திப்பார்.

மேலும், கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் தொழில்முறை மற்றும் விளையாட்டு தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கப்பல் பணியாளர்கள் மற்றும் இலங்கை கடற்படை உறுப்பினர்கள் இணைந்து யோகா அமர்வொன்றில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்படைகளுக்கிடையிலான வலுவான உறவு
இந்த நிகழ்வு உடல், உள மற்றும் ஆன்மிக நலன்களை மேம்படுத்துவதில் யோகாவின் பயன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்திய கடற்படை கப்பல்களின் இலங்கை வருகை, இரு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.
இது இந்தியாவின் “Neighbourhood First” (அண்டை நாடுகள் முதன்மை) கொள்கைக்கும், இந்திய பிரதமரின் “பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் (MAHASAGAR)” என்ற தொலைநோக்குப் பார்வைக்கும் இணங்க அமைகிறது.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri