இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Indian fishermen India Sri Lanka Navy
By Amal Feb 08, 2025 04:36 AM GMT
Report

இலங்கையின் கடற்படையினர் (Sri Lanka Navy) தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியும், இந்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினர்.

அத்துடன், ஏனைய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கொழும்பிலிருந்து சென்ற தொடருந்தை இடைநடுவில் விட்டுச்சென்ற ஓட்டுநர் : கடும் சிரமத்தில் பயணிகள்

கொழும்பிலிருந்து சென்ற தொடருந்தை இடைநடுவில் விட்டுச்சென்ற ஓட்டுநர் : கடும் சிரமத்தில் பயணிகள்

நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி

“தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு நீதி, "எங்கள் கடற்றொழிலாளர்களை மீண்டும் அழைத்து வாருங்கள்", "இனி கைதுகள் வேண்டாம்", "தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் இந்தியர்களே" போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏந்தியிருந்தனர்.

இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் | Indian Mps Protest Against Arrests Sri Lankan Navy

இந்தநிலையி;ல் தமிழ் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினை என்றும், அவர்கள் இலங்கையால் தவறாக நடத்தப்படும் இந்தியர்கள் என்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இதன்போது கருத்துரைத்துள்ளார்.

கைதுகள் காரணமாக இந்திய கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல பயப்படுவதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்து துன்புறுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 97 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியமட்டத்தில் செம்பியனான யாழ்.மகாஜனா பெண்கள் அணி

தேசியமட்டத்தில் செம்பியனான யாழ்.மகாஜனா பெண்கள் அணி

தொழில் திணைக்களத்தின் பெயரில் மோசடி நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொழில் திணைக்களத்தின் பெயரில் மோசடி நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US