காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கை அகதிகள் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் அகதிகள் முகாம்களிலிருந்தும் ஏனைய தனியார் குடியிருப்புகளிலிருந்தும் காணாமல் போனதாகக்கூறப்படும் இலங்கைத் தமிழர்கள் 65 பேர் தொடர்பில் தமிழகக் காவல்துறைக்கும் இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்த செய்தியை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாலைத்தீவுக்கு அருகில் உள்ள டீகோ காா்சீயா( Diego Garcia) பகுதியில் ஏதிலிகள் சிலர் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியானபோதும் அது தொடர்பில் தமிழக காவல்துறையினருக்குச் சுயாதீனமாகத் தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.
இதேவேளை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை அகதிகள் கடனாவுக்கு செல்லும் நோக்கில் கேரளாவின் கரையிலிருந்து புறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த ஏதிலிகள், தென்னாப்பிரிக்காவை அடைய இந்தியப் பெருங்கடலைப் படகு ஒன்றின் மூலம் கடந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அங்கிருந்து அவர்கள் கனடாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். எனினும் அவர்கள் தொடர்பில் உாிய தகவல்கள் கிடைக்காமையை அடுத்து தமிழக காவல்துறையினர், சர்வதேச காவல்துறையான இன்டா்போலிடம் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை தமிழகத்தில் உள்ள 108 ஏதிலி முகாம்களில் சுமார் 65ஆயிரம் ஏதிலிகள்
தங்கியுள்ளதாகத் தமிழக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
