எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது: மணிப்பூர் சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி வேதனை

Narendra Modi Viral Video India Manipur
By Renuka Jul 20, 2023 11:36 AM GMT
Report

இந்திய மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின பெண்களின் ஆடைகளைக் களைத்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

“எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது என்றும் இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம்” எனவும் இன்றைய தினம் (20.07.2023) ஊடகங்களுக்குத் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலமான மணிப்பூரில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்களின் கும்பல் ஒன்று சேர்ந்து ஆடைகளைக் களைத்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது: மணிப்பூர் சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி வேதனை | Indian Manipur Incident

நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன்.

சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வன்முறை

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3ஆம் திகதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது: மணிப்பூர் சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி வேதனை | Indian Manipur Incident

இந்த நிலையில் இந்தக் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தற்போதுதான் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் கூறியுள்ளதாவது, "நேற்று வெளியான வீடியோவில் மனிதாபிமானமற்ற முறையில், அவமரியாதை செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்காக எனது இதயம் கலங்குகிறது.

மரண தண்டனை

இந்தச் சம்பவம் குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மணிப்பூர் பொலிஸார் இன்று காலையில் முதல் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது முழுவீச்சில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு நமது சமூகத்தில் இடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US