பசறையில் 57 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம்
பசறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நமுனுகுல, கனவரல்ல தோட்டப் பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நேற்று (06) நாட்டப்பட்டது.
இந்திய அரசின் நிதியுதவியுடனும் இலங்கை அரசின் அனுசரணையுடனும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளைக் கொண்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் துணை உயர்ஸ்தானிகர் ஹர்விந்தர் சங் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இரகசிய தகவல் வழங்கும் கைதிகளை இலக்கு வைத்து தாக்குதல்! பின்னணியில் மிகப்பெரும் சதி - நீதி அமைச்சரின் அதிர்ச்சித் தகவல்
வீட்டுத்திட்டம்
இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம், பதுளை மாவட்டத்தின் கனவரல்ல பகுதியில் மண்சரிவு அபாயத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த 57 குடும்பங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்திய அரசினால் தலா 28 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுவதுடன், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசினால் தலா 4 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான, சுபீட்சமான மற்றும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தநிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்னன் செல்வராஜ்,இ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம, பசறை பிரதேச செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
குறைந்த விலைக்கு நெல்லை வாங்குங்கள் என்று நாங்கள் குறிப்பிடவில்லை: கமக்காரர்கள் அமைப்பு சுட்டிக்காட்டு
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam