ஆபத்தான நிலையில் நாட்களை கழிக்கும் கிளிநொச்சி தெளிகரை மக்கள்(Video)
கிளிநொச்சி தெளிகரை பகுதியில், இந்திய அரசினால் வழங்கப்பட்ட வீடுகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதாக குறித்த வீடுகளில் வாழும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இந்திய அரசின் உதவியுடன் வழங்கப்பட்ட 50 வீடுகளின் கூரைகள் சேதமடைந்தும் வீட்டின் சுவர்கள் உடைந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறான வீடுகளில் தங்கியுள்ள தாங்கள் பருவமழை காலங்களில் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்
அத்துடன் குறித்த பகுதிகளில் நிரந்தர வீட்டு திட்டங்கள் கிடைக்கப்பெறாத நிலையிலும் ஏற்கனவே அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான முழுமையான நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் திட்டங்களை நிறைவு செய்ய முடியாத நிலையிலும் தற்காலிக விடுதலில் வாழ்ந்து வரும் குடும்பங்களும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்களில் எழுபது வீதமானவர்கள் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களாக காணப்படுவதுடன் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
