நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் கிளிநொச்சி தெளிகரை மக்கள்
கிளிநொச்சி - தெளிகரை பகுதியில், இந்திய அரசினால் வழங்கப்பட்ட வீடுகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதாக குறித்த வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, பூனகரி, தெளிகரை பகுதியில் இந்திய அரசின் உதவியுடன் வழங்கப்பட்ட 50 வரையான வீடுகளின் கூரைகள் சேதமடைந்தும் வீட்டின் சுவர்கள் உடைந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான வீடுகளில் தங்கியுள்ள தாங்கள் பருவமழை காலங்களில் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நெருக்கடி நிலை
அத்துடன் குறித்த பகுதிகளில் நிரந்தர வீட்டு திட்டங்கள் கிடைக்கப்பெறாத நிலையிலும் ஏற்கனவே அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான முழுமையான நிதி விடுவிக்கப்பட்ட நிலையிலும், குறித்த திட்டங்களை நிறைவு செய்ய முடியாத நிலையிலும் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் குடும்பங்களும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் வசிக்கும் மக்களில் எழுபது வீதமானவர்கள் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களாக காணப்படுவதுடன் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |