கனடாவில் காலிஸ்தான் அமைப்பினரின் வாள்வெட்டிலிருந்து உயிர்தப்பிய இந்திய உயர்ஸ்தானிகர்
கனடாவில் ஒருமுறை காலிஸ்தான் அமைப்பிலுள்ள ஒருவரின் வாள்வெட்டு தாக்குதலிலிருந்து இரண்டு அங்குல இடைவெளியில் உயிர்தப்பியதாக இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
அண்மையில், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய சஞ்சய் வர்மா, தானும் தன் மனைவியும் காலிஸ்தான் அமைப்பினரிடம் இருந்து உயிர் தப்பிய வகையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கனடாவின் ஆல்பர்ட்டாவில், தானும் தனது மனைவியும் இந்தியர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நிகழ்வின் முடிவின் பின்னர் வெளியேறிய போது, சுமார் 150 காலிஸ்தான் அமைப்பினை சேர்ந்தவர்கள் அவ்விடத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
திடீர் சம்பவம்
எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது திடீரென தன்னை நோக்கி ஒரு வாள் பாய்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த வாளானது, சீக்கியர்கள் பாரம்பரியப்படி வைத்துக்கொள்ளும் சிறு கத்தி அல்ல எனவும் மிக நீளமானது எனவும் அவர் தெரிவித்த இரண்டு அங்குல இடைவெளியில் தான் உயிர் தப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவ்விடத்திலிருந்து வெளியேறிய உள்ளூர் பொலிஸார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும், தனக்கு அது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சில சம்பவங்கள் கனடாவில் நிகழ்ந்திருந்தாலும், தன்னைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் சீர்பொருந்தவேண்டும் என்பதே தனது நோக்கம் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
