வாகன விபத்தில் இருவர் மரணம்
பொல்கஹவெல - அலவ்வ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.
அலவ்வயில் இருந்து பொல்கஹவெல நோக்கிப்பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
எனினும், இருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 48 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தையடுத்து பாவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
