கொழும்பில் ஜேவிபியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) கொழும்பில் ஜே.வி.பியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று (30.05.2024) இடம்பெற்றுள்ளதுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பிலும் இரண்டு தரப்பினரும் இதன்போது விவாதித்துள்ளனர்.
அத்துடன், இருதரப்பினதும், பல்வேறு முயற்சிகள் குறித்து சந்தோஸ் ஜா ஜேவிபியினருக்கு விளக்கமளித்தாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதிநிதிகள்
இந்தநிலையில் இலங்கையை உலகத்தில் இருந்து தனித்து விட முடியாது என்ற அடிப்படையில் தமது இந்திய விஜயம் அமைந்திருந்ததாக ஜேவிபியின் பிரதிநிதிகள் இந்;த கலந்துரையாடலின்போது கருத்துரைத்ததாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் தலைமையிலான ஜேவிபி பிரதிநிதிகள் பங்கேற்றனர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri