இந்திய உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளரை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல் செயலாளர் அசோக் குமார், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று (19.01.2026) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ரூபாய் 2.3 பில்லியன் மதிப்புள்ள இந்திய உதவியின் கீழ், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதும், அதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள திட்ட இடங்களை நேரில் பார்வையிடுவதும் தான் தனது திருகோணமலை மாவட்ட விஜயத்தின் நோக்கம் என அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவிப்பு
தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வழங்கப்படும் ஒத்துழைப்பிற்காக ஆளுநர், முதல் செயலாளருக்கு விசேட நன்றியை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்காக தனது குழு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிட்வா புயல் பேரழிவு ஏற்பட்ட போது இந்திய அரசின் தலையீடு மற்றும் உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அதற்கான நன்றியும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam