இலங்கையர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம் தொடர்பான செய்தி: இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு
இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அல்லது இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக வெளியான செய்தியை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக, விசா பிரிவின் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் இலங்கை பிரஜைகள் என்பதனால் அலுவலகத்திற்கு வர முடியாததன் காரணமாக, செயற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்நிலையில் எங்கள் செயல்பாட்டை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பப் பெறுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம் எனவும் இலங்கையர்களுக்கு இந்தியாவுக்கான பயணத்தை எளிதாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப் போலவே இலங்கையர்களும் இந்தியாவிற்கு செல்ல முடியும்”என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
