யாழ். செல்லும் இந்திய வெளிவிவகார செயலாளர்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா(Harsh Vardhan Shringla) இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின்(Jayanath Colombage) அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தார்.
இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார செயலாளர், நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa), பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்(G.L.Peiris) மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam