யாழ்ப்பாணம் செல்கின்றார் இந்திய வெளியுறவு செயலாளர்!
இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளும், இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) யாழ்ப்பாணத்திற்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் (Jayanath Colombage) அழைப்பின் பேரில் நாளை முதல் எதிர்வரும் 5ம் திகதி வரை இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த பயணம் நீண்டகால உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு செயலாளருடனான இருதரப்பு சந்திப்பை அடுத்து, இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர், இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவு செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் இலங்கை விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan