இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம்
இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று முதல் மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு மூன்று நாள் பயணத்தை ஆரம்பிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி ஜெய்சங்கர் முதலில் மாலத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இலங்கைக்கு நாளையதினம் பயணிக்கும் ஜெய்சங்கர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடுவார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
