இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 27 கடற்றொழிலாளர்களையும் ஐந்து விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பாக இன்று(18.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்டு கொடு, கச்சத்தீவு பகுதியில் இழந்த உரிமையை வேண்டும், இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உண்டான படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட விசைப் படகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க மத்திய மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி நிவாரண வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அரசு அதிகாரிகள் உத்தரவாதம்
இந்நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி கடற்றொழிலாளர்களையும் விசைப்படகுகளையும் விடுதலை செய்து தருவதாக அரசு சார்பில் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் சொன்னவாறு விடுவிக்கப்படாவிட்டால் நவம்பர் 1ஆம் திகதி தமிழ்நாடு
முழுவதும் உள்ள அனைத்து கடற்றொழில் அமைப்புகளையும் ஒன்று திரட்டி மண்டபத்தில் தொடருந்து மறியல் போராட்டம் மற்றும் தொடர்ச்சியான பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த
இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.