இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் - உயர்மட்ட பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்
இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றமை மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை
இந்த கலந்துரையாடலில், பங்கேற்பதற்காக இலங்கைக் தரப்பிலிருந்து அதிகாரிகள் இந்தியா பயணமாகவுள்ளனர் என்று மீன்பிடி அமைச்சர் இ. சந்திரசேகர் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எனினும், குறிப்பிட்ட நாளான நாளைமறுதினம்(25) இவ்வாறான பேச்சு எதுவும் இடம்பெற மாட்டாது என்று தற்போது இந்தியத் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியத் தரப்பால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அல்லது பேச்சு இடைநிறுத்தம் தொடர்பில், இலங்கைக் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான கருத்துக்களும் அல்லது விளக்கங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri