எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 17 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களுக்கு 15.10 2025 வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியை சேர்ந்த 17 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த 17 கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று நீரியல்வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் பதிவு நடவடிக்கைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கை
கடற்றொழிலாளர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்து ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் முற்படுத்தியுள்ளனர்.
குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் எதிர்வரும் 15ம் திகதிவரை கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
