இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் (PHOTO)
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் அவர்களிடமிருந்து இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் 11 மீனவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்களுக்கு மலேரியா மற்றும் கோவிட் பரிசோதனை
மேற்கொண்டு அவர்களை மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட
நடவடிக்கைக்காக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
