இழுவைமடித் தொழிலுக்கு டக்ளஸ் மறைமுகமான ஆசீர்வாதம் என்பதில் உண்மையில்லை! குருநகர் கடற்றொழிலாளர்கள்
கடல் வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இழுவைமடித் தொழில் மேற்கொள்ளப்படுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மறைமுகமான ஆசீர்வாதம் இருப்பதாக வெளியாகும் விமர்சனங்களில் உண்மையில்லை என குருநகர் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் இன்று (17.3.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட காலத்தில் இருந்து மாற்று
தொழில் முறைக்கு மாற வேண்டியதன் அவசியத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா வலியுறுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோத தொழில் முறை
இதனிடையே மூன்று வழிமுறைகள் ஊடாக இந்தியக் கடற்றொழிலாளர் அத்துமீறி எல்லை சட்ட விரோத தொழில் முறையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்திற்கு, பல்வேறு தொழில்சார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் வருகை தந்திருந்த மாதகல் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதாவது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், இராஜதந்திர ரீதியில் முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிநேகபூர்வ கலந்துரையாடல்களையும் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வையும் சரியான புரிதலையும் ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றின் ஊடாக இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
May you like this Video

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
