மக்களிற்கு தடையில்லாத மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்க ஏற்பாடு:டக்ளஸ்
காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலமான மின் திட்டங்கள் எங்கு உற்பத்தியாக்கப்படுகின்றதோ அப்பகுதி மக்களிற்கு 24 மணிநேர தடையில்லாத மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (14.03.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலமான மின் திட்டங்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்த பிறகு சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கின்றோம்.
அதைவிட அந்த முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி அப்பகுதி மக்களுக்கு நீடித்த நிலையான கௌரவமான வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருள் பாவனை
இங்கு பிரதானமாக போதைப்பொருள் பயன்பாட்டை
கட்டுப்படுத்துவது, உணவுப் பாதுகாப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, கல்வி,
சுகாதாரம் அவ்வாறான பல முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை என்பது நாடு தழுவிய ரீதியில் எங்களுடைய மக்களை அதிலும் குறிப்பாக இளம் சமூகத்தினரை பாதிக்கும் விடயமாகின்றது.
நாங்கள் அதற்கு முன்னுரிமையளித்து அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம். அதன் முன்னேற்றங்கள் குறித்து 2 வாரங்களில் கூற இருக்கின்றோம்.
அரிசி விநியோகம்
அதேவேளை நாடு தழுவிய ரீதியில் அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அடையாளம் கண்டு குறிப்பிட்ட காலங்களிற்கு குறிப்பிட்ட தொகை அரிசியை விநியோகிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு கிலோ நெல்லை 100 ரூபா கொடுத்து வாங்குமாறு கூறியிருந்தார். ஏற்கனவே 60 மற்றும் எழுபது ருபாவிற்கு வாங்கும் நிலைமையே இருந்தது.
100 ரூபாவாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தனியாரும் அந்த விலைக்கு பெற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரத்து 832 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரத்து 171 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த குடும்பங்களிற்கு அவை கொடுக்கப்படும்.
கண்ணீர் புகை
இவற்றை விட எல்.ஆர்.சியின் காணி பங்கீடு சம்மந்தமாகவும் அதை மீளாய்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் மற்றும் சட்டவிரோத மண்ணகழ்வு காரணமாக கண்ணிவெடி அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்ட நேரத்தில் கண்ணீர் புகை வீசப்பட்டு இருவர் உயிரிழந்தது தொடர்பில் இதன்போது ஊடகவிலாளர் கேள்வி எழுப்பிய போது, அவர் அவை எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என்று எனக்கு தெரியாவிட்டாலும் அப்படி சில சம்பவங்கள் நடந்ததாக அதாவது இந்த தாக்குதலில் தகவல்கள் கிடைத்தது.
அது
தொடர்பாக ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
