இந்திய நிதி அமைச்சரை சந்திக்க தயாராகும் கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள நிதி அமைச்சரை சந்தித்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக யாழ். கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (01.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய நிதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவோம். அத்துடன் நிதி சேகரித்து தமிழகம் சென்றும் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளோம்.
சட்ட திருத்த முன்வரைவு
இந்திய மத்திய அமைச்சர் யாழ்ப்பாணம் வராது விட்டால் கொழும்பு சென்று சந்திப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
இதற்கமைய, புதிதாக கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் சட்ட திருத்த முன்வரைவு தொடர்பான கருத்துக்கள் கோரப்படுகின்றன.
நியாயமான விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அமைச்சரவைக்கு சமர்பிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
மேலும், கடற்தொழில் அமைச்சருடனும் இச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
