குறைந்துள்ள கச்சத்தீவு பிரச்சினைகள் : இந்திய தரப்பு கருத்து
சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது குறைந்திருப்பதாக இந்திய (India) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - சென்னையில் (India - Chennai) இடம்பெற்ற பாரதீய ஜனதாக் கட்சியின் கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”10 வருடங்களுக்கு முன் காங்கிரஸ் அரசாங்கம் பதவியில் இருந்தபோது தமிழக கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது குறைந்துள்ளன.
இந்திய - இலங்கை உடன்படிக்கை
இதற்கு இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சிறந்த உறவுகளே காரணம். கச்சத்தீவு எனப்படும் பகுதியானது, இலங்கைக்கும் இந்தியாவின் இராமேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது.
எனவே, அது இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய கடற்றொழில் செய்யும் பிரதேசமாக இருந்தது.
இந்த நிலையிலேயே, இந்திய - இலங்கை கடல் பிரதேச உடன்படிக்கையின்படி அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசாங்கம், அதனை இலங்கையின் எல்லைக்குட்பட்டதாக ஏற்றுக்கொண்டது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |