ஷிரந்தி ராஜபக்சவின் கண்ணில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பரிதாபநிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் கண் நோய் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதாவது சிங்கப்பூர் சென்று மலேசியா வழியாக இலங்கை வந்தபோது பரவிய காணொளிகளில் கண்ணில் பிளாஸ்டர் இல்லை என்றும், கைது செய்யப்பட்ட அன்று திடீரென கண்ணில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டதாகவும சர்ச்சைக்குரிய கருத்து எழுந்துள்ளது.
ஷிரந்தி ராஜபக்ச நேற்று (09) காலை கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பரிசோதனையின் பின்னர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
விசேட பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷிரந்தி
நேற்று காலை 10.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவரை தேசிய கண் வைத்தியசாலையில் முன்னிலைபடுத்துமாறு சிறைச்சாலை விசேட வைத்திய நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சிகிச்சை அளித்த தனியார் வைத்தியசாலை வைத்தியரிடம் முன்னிலைபடுத்துவதற்காக அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இருப்பினும், அவ்வாறான உத்தரவுகள் எதுவும் வரவில்லை என்றும், சட்டத்தரணி விடுத்த கோரிக்கையினை மாத்திரமே நீதிமன்றம் சிறைச்சாலைக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைச்சட்டம்
அனைத்து வைத்திய பதிவுகளையும் அரச வைத்தியசாலையில் இருந்து, அரச அங்கீகாரம் பெற்ற வைத்தியர்கள் மூலம் நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்பது சிறைச்சட்டமாகும்.

சிறை கைதிகளுக்கு வெளியே பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள அனுமதிப்பதன் மூலம் அவருக்கு விசேட அனுகூலங்களை வழங்கும் பொய்யான அறிக்கைகள் தயாரிக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் ஷிரந்தியின் கண் நோய் போலியானது என்ற கருத்தும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.
திடீரென கண்ணில் ஒட்டப்பட்ட பிளாஸ்டர்
அதாவது சிங்கப்பூர் சென்று மலேசியா வழியாக இலங்கை வந்தபோது பரவிய காணொளிகளில் கண்ணில் பிளாஸ்டர் இல்லை என்றும், கைது செய்யப்பட்ட அன்று திடீரென கண்ணில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டதாகவும சர்ச்சைக்குரிய கருத்து எழுந்துள்ளது.

இவ்வாறு கண்ணில் ஒட்டப்பட்டுள்ள பிளாஸ்டர் வைத்தியருக்கு தெரிந்து செய்யப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இவ்வாறான பின்னணியில்‘சிரிலிய சவிய’ வங்கி கணக்கு நிதி முறைகேடு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 7ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.