38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்தக் கூட்டம் இன்று காலை (09.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருதரப்புப் பேச்சுவார்த்தைகள்
ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த மற்றும் ஒரு குழுவினரையும் சந்திக்க உள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் செயலாக்கம் குறித்தும் இந்தப் பயணத்தின்போது ஆய்வு செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24