இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாகத் துணை நிற்கும்! பாதுகாப்புத் துறை அமைச்சர்
இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது நேற்றைய தினம் (08.09.2026) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி
இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம்
2014ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அது இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24