வான்கடே மைதானத்தில் பாடல் பாடி வெற்றியை கொண்டாடிய இந்திய அணி
இருபதுக்கு இருபது உலகக்கிண்ண வெற்றியை தொடர்ந்து, இந்திய அணி (Indian Cricket Team) தனது வெற்றியை, ரசிகர்களுடன் சேர்ந்து ஒருமித்த குரலில் பாடல் பாடி கொண்டாடியுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளின் (West Indies) பார்படோசு நகரில் இருந்து இந்தியாவுக்கு வருகை தந்த இந்திய அணி வீரர்கள், நேற்று (04.07.2024) காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) சந்தித்தனர்.
அமோக வரவேற்பு
அத்துடன், மும்பை (Mumbai) நகரில் வாகன பவனியில் வந்த இந்திய அணிக்கு அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது.
Vande Mataram ?? pic.twitter.com/hoQEJma3T0
— RAMSINGH YADAV (@RAMSING05433145) July 5, 2024
அதனைத் தொடர்ந்து, 33, 000 ரசிகர்கள் மும்பை வான்கடே (Wankhede Stadium) மைதானத்தில் கூடிய நிலையில், இந்திய அணி வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த வெற்றிக் கொண்டாத்தின் போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் சேர்ந்து ஒருமித்த குரலில் 'வந்தே மாதரம்' பாடலை பாடியுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 40 நிமிடங்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
