எல்லை தாண்டிய இந்திய படகுகள், வீடு திரும்பிய இலங்கை மீனவர்கள் (VIDEO)
இந்திய இழுவைப் படகுகள் எல்லை தாண்டி அத்துமீறி உள்நுழைந்ததால் தொழிலுக்கு செல்லாமல் இலங்கை மீனவர்கள் வீடு திரும்பியுள்ளார்கள்.
இந்திய இழுவைப் படகுகள் நேற்று இரவு இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இலங்கை மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் திரும்பி வீடு சென்றுள்ளனர்.
மாதகல் கடற்கரையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்குள் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் மாதகல் பகுதி மீனவர்களே இவ்வாறு தொழிலுக்கு செல்லாமல் வீடு சென்றுள்ளனர்.
இந்திய மீனவர்கள் இனி இலங்கை எல்லை கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என அண்மையில் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |