இந்திய விண்வெளி வீராங்கனை பூமிக்கு திரும்புவதில் தாமதம் : மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பயணம்
மூன்றாவது முறையாக, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஸ்பேஸின் ஸ்டார் லைனர் என்ற விண்வெளிக்கப்பல் மூலம் சுனிதாவும் அவருடைய கணவரும், கடந்த ஜூன் 5ஆம் திகதியன்று விண்வெளி மையத்துக்கு புறப்பட்டனர்.
தொழில்நுட்ப பிரச்சினைகள்
எனினும் அவர்கள் புறப்படுவதற்கு முன்னரே, அவர்கள் பயணித்த விண்வெளிக்கப்பலில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் இனங்காணப்பட்டன. அவை சரிசெய்யப்பட்ட பின்னரே, அவர்களின் பயணமும் இடம்பெற்றது.
இந்தநிலையில் ஆய்வுகளை முடித்த பின்னர், சுனிதா பயணம் செய்த விண்வெளிக்கப்பல், ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று பூமிக்கு திரும்பியிருக்கவேண்டும்.
எனினும் ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட மற்றொரு தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பூமிக்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து பூமிக்கான பயணம் இன்று ஜூன் 26ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இன்னும் விண்வெளிக்கப்பலில் தொழில்நுட்ப் பிரச்சினை தீர்க்கப்படாமை காரணமாக, இன்று அந்த விண்வெளிக்கப்பல் பூமிக்கு திரும்பவில்லை.
இது நாசா விஞ்ஞானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதியன்று சுனிதா பயணித்த விண்வெளிக்கப்பல் பூமிக்கு திரும்பும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |