மொட்டுவும் யானையும் தனிவழியில் சென்றால் இரு தரப்புக்கும் பின்னடைவு: திஸாநாயக்க எச்சரிக்கை
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் (SLPP), ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க எச்சரிக்கை (S. B. Dissanayake) விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆசியுடன் களமிறங்கினால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார்.அவ்வாறு இல்லாவிட்டால் தோல்வியே ஏற்படும்.
முரண்பாடுகள்
ரணிலைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதிப் பதவிக்கு மொட்டுக் கட்சியே கொண்டுவந்தது.

எனினும், மொட்டுக் கட்சி எதிர்பார்த்த அரசொன்று அமையவில்லை. எனவே, இரு தரப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு இணைந்து பயணித்தால் ரணிலுக்கு வெற்றி நிச்சயம்.
மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனிவழியில் சென்றால் இரு தரப்புகளுக்கும் பின்னடைவு ஏற்படும் என்றும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam