அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் மிச்சிகன் மாகாணத்தில் முதல் முறையாக இந்தியர் வெற்றி
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக இந்திய அமெரிக்கர் ஸ்ரீ தானேதர் (67) எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் 84,096 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்ஸ் 27,366 வாக்குகள் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியான ஸ்ரீ தானேதர், அமெரிக்க நாடாளு மன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நான்காவது இந்திய அமெரிக்கராவார்.
இவரை தவிர ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகிய மூன்று இந்திய அமெரிக்கர்களும் அமெரிக்க எம்.பியாகியுள்ளனர்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், கர்நாடாகாவின் பெல்காம் மாவட் டத்தில் வளர்ந்தவர் என்பதுடன், அவர் பணம் சேர்க்க விரும்பவில்லை தொழிலை கைவிட்டு, சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை News Lankasri
