காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்
இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றைய தினம் (16.02.2024) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் அவர் பார்வையிட்டு வருகின்றார்.
அந்த வகையில் அவர் காங்கேசன்துறை துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.
மேலும்,நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்துள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்
அத்தோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின்
துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக
ச.கிருஷ்னேந்திரன், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட
பயனாளிகள் கலந்து கொண்டனர்.


பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri