இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியது சிம்பாபே
புதிய இணைப்பு
சிம்பாபே அணிக்கெதிரான முதலாவது டீ 20 போட்டியில் இந்தியா அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
ஹராரேயில் நடைபெற்ற இந்த போட்டியில் சிம்பாபே நிர்ணயித்த 115 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.5 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
மூன்றாம் இணைப்பு
சிம்பாபேயுடனான டி20 தொடரில் இந்திய அணி பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.
பவர்ப்லே ஓவர் நிறைவடைவதற்கு முன்னரே இந்தியா அணி 24 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்து பெரிதும் தடுமாறி வருகிறது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை ஈழத்து 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
116 என்பது இந்திய அணிக்கு இலகுவான இலக்கு என எதிர்பார்க்கப்பட்டபோதும், அதனை சிம்மபவே வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாடி வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
இந்தியா மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையிலான முதலாவது டி 20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணயசுழட்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் சிம்பாவே அணி தற்போது வரை 2 விக்கட் இழப்புக்கு, 49 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்திய கிரிக்கெட் அணி, சிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதலாவது போட்டியானது ஹராரேயில் இன்று நடைபெறவுள்ளது..
20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கலந்து கொள்ளும் டி20 தொடர் இதுவாகும்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
உலகக் கிண்ணத்துடன் ரோகித் சர்மா, விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விடைபெற்றுள்ளதால், அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 ஆட்டத்தில் இந்தியாவும், 2 ஆட்டத்தில் சிம்பாப்பேயும் வெற்றி பெற்றுள்ளன.
? Harare
— BCCI (@BCCI) July 3, 2024
Preps Begin ? ?#TeamIndia hit the ground running for the #ZIMvIND T20Is ? ? pic.twitter.com/9nce3rMQEa
இந்த போட்டியில் இந்தியா அணி சார்பாக சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரெல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷர் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் ஷர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், சிம்பாப்பே அணி சார்பில் சிகந்தர் ராசா, பராஸ் அக்ரம், பிரையன் பென்னெட், ஜோனதன் கேம்ப்பெல், டெண்டாய் சத்தாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கயா, கிளைவ் மடான்டே, வெஸ்லி மெட்விரே, டாடிவான்சே மருமானி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுட்டா, பிளஸ்சிங் முஜரபானி, தியான் மயர்ஸ், ஆண்டம் நக்வி, ரிச்சர்ட் கவரா, மில்டன் சவும்பா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |