பிலிப்ஸின் அபார பிடியெடுப்பு : சொற்ப ஓட்டத்தில் ஆட்டமிழந்த விராட் கோலி
நடப்பு செம்பியன்ஸ் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (02) மோதுகின்றன.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
7ஆவது இந்திய வீரர்
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்துள்ளார்.
GLENN PHILIPS - THE GREATEST IN TAKING STUNNERS 🤯#INDvsNZ #ChampionsTrophy #ViratKohli𓃵 pic.twitter.com/Cz2KLUN9Uc
— Tajamul (@Tajamul132) March 2, 2025
ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்ஸின் (Glenn Phillips) அபாரமான பிடியெடுப்பில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
இப்போட்டியின் மூலம் 300ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), டோனி (347), ராகுல் டிராவிட் (340), அசாருதீன் (334) கங்குலி (308), யுவராஜ்சிங் (301) ஆகியோருடன் விராட் கோலியும் இணைந்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...! 19 மணி நேரம் முன்

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri
