இக்கட்டான நிலையில் உள்ள இந்திய அணிக்கு மழையும் உதவக்கூடும்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மழை உதவி செய்யுமாக இருந்தால் இந்திய அணிக்கு தோல்வியை தவிர்க்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்டர்- கவாஸ்கர் கிண்ண மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று(16.12.2024) ஆரம்பமானது.
இதன்போது, முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, மழை பெய்தமையால், இன்றைய ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்னிங்ஸ் தோல்வி
இதில் ஜெய்ஸ்வால், சுப்மான் கில், கோஹ்லி மற்றும் ரிசப் பன்ட் ஆகியோர் உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்தநிலையில், நாளை நடைபெறவுள்ள நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மாவும், கே.எல் ராகுலும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 200க்கும் அதிக எண்ணிக்கையில் உயர்த்தினால் மாத்திரமே, இந்திய அணியால், இன்னிங்ஸ் தோல்விக்கான நிலையில் இருந்து மீளமுடியும்.
எதுவும் நடக்கலாம்
அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை தொடுவதற்கு இன்னும் இந்திய அணி 394 என்ற சவால் மிக்க ஓட்டங்களை பெறவேண்டும்.
எனினும், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களின் உத்வேகம் அதிகரித்துள்ளமையால், இந்தியாவுக்கு நாளையதினம் சவாலான நாளாகவே இருக்கும்.
அதேநேரம், நாளை மழை தொடருமாக இருந்தாலும் அது இந்திய அணிக்கும் அழுத்தத்தை குறைக்கும். எனவே, எதுவும் நடக்கலாம் என்ற வகையில், பொறுத்திருந்த பார்க்கவேண்டிய போட்டியாக இது அமைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |