இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமரால் திறப்பு
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகில் கட்டப்பட்ட 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவிலான பிரமாண்ட புதிய நாடாளுமன்றம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் உத்தியபூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாக சாலை பூஜையில் செங்கோல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செங்கோல் முன்பாக பிரதமர் மோடி விழுந்து வணங்கியதை அடுத்து அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் செங்கோலை வழங்கினர். மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா
நாடாளுமன்ற, செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.
அதனை தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமரால் வெளியிடப்பட்டது.
புதிய கட்டடத்தில் மக்களவையில் 888 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமரும் வகையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |