பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா - இங்கிலாந்து இடையே ஒப்பந்தம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட இந்த நாள், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என மோடி தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம்
வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு நலன்களையும் அடிப்படையாக கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்ற பின்னர் நரேந்திர மோடி, முதன்முறையாக அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




