இந்தியாவுக்கு பாரதம் என பெயர் மாற்றும் விவகாரம்: நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் தீர்மானம்
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, செப்டம்பர் 18-22 வரை திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை 'பாரதம்' என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பிரசிடெண்ட் ஆஃப் பாரத்'(பாரதத்தின் ஜனாதிபதி) என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகவே இந்த தகவல் இந்தியாவின் பெயரில் மாற்றம் ஏற்படவுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Mr. Modi can continue to distort history and divide India, that is Bharat, that is a Union of States. But we will not be deterred.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023
After all, what is the objective of INDIA parties?
It is BHARAT—Bring Harmony, Amity, Reconciliation And Trust.
Judega BHARAT
Jeetega INDIA! https://t.co/L0gsXUEEEK