இலங்கையை பார்த்தபடி அமைய உள்ள 108 அடி ஆஞ்சநேயர் சிலை
தமிழகம் - இராமேஸ்வரம் பகுதியில் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் இலங்கையை பார்த்தபடி 108 அடியில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையொன்று அமைக்கப்படவுள்ளது.
குறித்த சிலை இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா கிராமத்தில் அமையப்பெறவுள்ளது.
சிலை அமைப்பதற்கான அஸ்திவார பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் அடுத்தாண்டு சிலை திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
108 அடி ஆஞ்சநேயர்
இராமேஸ்வரம் என்பது இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய காசிக்கு நிகரான புண்ணிய பூமி.
எனவே பாவங்கள் நீங்கி புண்ணிய கிடைக்கும் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குறித்த பகுதிக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்து, அடுத்தாண்டு இராமேஸ்வரத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய புண்ணிய தலமாகவும் சுற்றுலா தலமாகவும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |