புதிய மாற்றங்களுடன் பயணத்தைத் தொடரும் இலங்கை மலையக மன்றம்

Upcountry ceylon upcountry foundation India Tamil people
By Independent Writer Jun 07, 2021 09:12 AM GMT
Report

இலங்கை வாழ் இந்திய வம்சாவழி தமிழர்களின் நலன்களுக்காக "மாற்றத்திற்காகவும் பொறுப்பான வளர்ச்சிக்காகவும் எழுச்சி பெறும் மலையகம்" என்ற தொனிப்பொருளுடன் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கிவரும் இலங்கை மலையக மன்றத்தின் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மெய்நிகர் மூலம் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தின் பரிந்துரைகள் தேசிய சபையினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதியவர்கள் மக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மலையக மன்றம்‌ "உறுப்பினர் சேர்க்கையில் எதிர்காலத்தில் ஈடுபடுவதில்லை எனவும், இலங்கையில் வாழும் அனைத்து இந்திய வம்சாவழி தமிழர்களும் இலங்கை மலையக மன்றத்தின் உறுப்பினர்களே" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இனி வரும் காலங்களில் அமைப்பு இயங்கவுள்ளது.

இதுவரை இலங்கை மலையக மன்றத்தில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக தொடர்ந்து இணைந்திருக்கலாம்.

இந்த உறுப்புரிமை என்பது அங்கத்தவ இலக்கத்திலோ அல்லது உறுப்பினர் என்ற அங்கீகாரத்திலோ அன்றி ஒவ்வொருவரும் சமூகத்தின் மீது கொண்டுள்ள தீராத பற்று மற்றும் அக்கறையிலேயே தங்கியுள்ளது.

எனவே எமது‌ சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொருவரும் தமது சமூகக்கடமைகளை ஆற்ற முன்வரவேண்டும்.

இது எமது குழந்தைகள் கௌரவமாக வாழவும், ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என‌‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாத்திரமே இலங்கை மலையக மன்றத்தின் பொறுப்புக்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என்பதுடன் ஒருவர் நிர்வாகக்குழு உறுப்பினராக உள்வாங்கப்படுவதற்கு அவ்வுறுப்பினர் குறைந்தது ஆறு மாதங்களிற்கு அமைப்புடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அவ்வுறுப்பினரை குறைந்தது மூன்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுத்துமூலம் அமைப்பின் தேசிய சபைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இலங்கை மலையக மன்றத்தின் பிரதிநிதியாக செயற்பட, அமைப்பு சார்பான கருத்துக்களை வெளியிட மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்பட தேசிய சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக்குழுவில் இடம்பெற்றிருக்கின்ற பதினைந்து பேர் தவிர்ந்த, வேறு எந்தவொரு உறுப்பினரின்‌ அமைப்பு சார்ந்த வெளி செயற்பாடுகளுக்கு இலங்கை மலையக மன்றம் பொறுப்பேற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு தனது பயணத்தை மிக வினைத்திறனாக தொடரும் இலங்கை மலையக மன்றத்தில் பல்வேறு பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் பின்வருமாறு இதற்கமைய,

பொருளாளராக பொகவந்தலாவையைச் சேர்ந்த ரேகா ராஜேந்திரனும், அலுவலகப் பொறுப்பாளராக லூல்கந்துரவைச் சேர்ந்த குமாரவேல் கிருஷாந்தனும், ஆண்கள் பிரிவு பொறுப்பாளராக மாவத்தகமவைச் சேர்ந்த கருப்பையா ஜெயசங்கரும், பெண்கள் பிரிவு பொறுப்பாளராக கண்டியைச் சேர்ந்த சீரங்கன் பவானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி பொருளாளராக கேகாலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் மதுஷாலினியும், ஆண்கள் பிரிவு பிரதி பொறுப்பாளராக மஸ்கெலியாவைச் சேர்ந்த சத்தியவேலு விஜயகாந்தும், பெண்கள் பிரிவு பிரதி பொறுப்பாளராக கண்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் திவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடக பிரிவு பொறுப்பாளராக வட்டவளையைச் சேர்ந்த ஆதிசிவம் அஜந்தனும், அச்சு மற்றும் வெளியீடு பிரிவுக்கு பொறுப்பாளராக புஸ்ஸலாவைச் சேர்ந்த செல்வராஜ் மெடோலினாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக, கம்பளையைச் சேர்ந்த வேலுசாமி சத்தியசீலன், ஹோல்புரூக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் தர்ஷிகா, பதுளையைச் சேர்ந்த சந்திரமோகன் நிரோஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US