2 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் இணையும் அதிரடி வீரர்! அணியின் முழுவிபரம்
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று(2025.12.20) அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை
இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
The same squad will play the @IDFCFIRSTBank 5-match T20I series against New Zealand in January.#TeamIndia | #INDvNZ https://t.co/o94Vdqo8j5
— BCCI (@BCCI) December 20, 2025
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பெப்ரவரி 7ஆம் திகதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகின்றது.
இந்தியா பாகிஸ்தானை பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் எதிர்கொள்கின்றது.
இந்திய அணி விவரம்-
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2ஆவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக 2023-ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.
நடந்து முடிந்த SMAT தொடரில் கேப்டனாக மற்றும் பேட்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம்- அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வொஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
You may like This..