ஈழத்தமிழர்களின் குடியுரிமை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு : வைகோ விடுத்துள்ள கோரிக்கை
அகதிகளுக்கு எதிரான உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை. இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க தலைமை நீதிபதி அறிவுறுத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை தமிழரான சுபாஷ்கரன் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, இராமநாதபுரம் நீதிமன்றம் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சென்னை உயர் நீதிமன்றம் இவர் தண்டனையை ஏழாண்டு காலமாக 2022ஆம் ஆண்டில் குறைத்தது.
தண்டனைக் காலம் முடிந்தவுடன்..
இவரது தண்டனை காலம் இந்த ஆண்டுடன் முடிவதை முன்னிட்டு, தண்டனைக் காலம் முடிந்தவுடன் இந்தியாவிலேயே தங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில், அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில், அவர் முறையிட்ட போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளான திபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் “உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல, இந்தியாவில் தொடர்ந்து தங்கும் உரிமை உங்களுக்கு இல்லை.
இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்குச் சென்று புகலிடம் கோருங்கள்” என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்கு உரியதாகும்.
திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகள்
தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களில் சிலரை இந்திய அரசு, இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டபோது, இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், “இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது” என ஆணை பிறப்பித்தது.
இதன் விளைவாக இலங்கை தமிழர்கள் பலர் இங்கு தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகின்ற மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள்.
நீதிபதிகள் இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்துமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
