அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் தடுமாறும் இந்திய அணி!
சுற்றுலா இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது, இந்திய அணியின் நிலை பின்னடைவாகவே அமைந்துள்ளது..
இந்தியஅணி தமது முதல் இன்னிங்ஸில் 2 ஆம் நாள் ஆட்டமுடிவின்போது, 5 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
இது, அவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் பெற்ற 474 ஓட்டங்களுடன் ஒப்பிடும்போது 310 ஓட்டங்களால் இந்திய அணி பின்னிலையில் உள்ளது.
பொலோ ஒன்
மேலும், பொலோ ஒன் நிலையை தவிர்க்கவேண்டுமானால் இந்திய அணி, இன்னும் 111 ஓட்டங்களை பெறவேண்டும்.
அதாவது மொத்த முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களாக 274 ஓட்டங்களை பெறவேண்டும்.
எனவே இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தததாக அமையும்.
அவுஸ்திரேலிய அணி
முன்னதாக அவுஸ்திரேலிய அணி பெற்ற 474 ஓட்டங்களில் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் அரை சதங்களை பெற்றனர்.
மேலும், ஸ்டீவன் ஸ்மித் 140 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஜெய்ஸ்வால் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மீண்டும் ஒருமுறை ரோஹித் சர்மா ஒற்றை இலக்க ஓட்டத்துடன்(3) ஆட்டமிழந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |